இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையால் வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பவர்களிற்கான பகுதி நேர என்.வி.கியூ. கற்கைநெறிகளிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேற்குறித்த கற்கைநெறி அடுத்த மாதம் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்வதற்கு உதவிப்பணிப்பாளர், இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, இல.12/4 கே.கே.எஸ்.வீதி (வீரசிங்கம் மண்டபம் 4 ஆம் மாடி) யாழ்ப்பாணம் எனும் முகவரியின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என உதவிப்பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

