யாழ் பேருந்து தரிப்பிடத்தில் குழந்தைகளுக்கான தாய்ப்பால் ஊட்டும் அறை புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தை அண்டியுள்ள விற்பனை நிலையங்கள், கழிவு வாய்க்கால்கள் மற்றும் மலசல கூடம் என்பவற்றையும் பார்வையிட்டதுடன், அவற்றை சுகாதார முறைப்படி பேண வேண்டிய அவசியத்தையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே யாழ் பேருந்து நிலையம் மற்றும் சூழவுள்ள வர்த்தக நிலையங்களுக்கான கண்காணிப்பு விஜயத்தினையம் மேற்கொண்டுள்ளார்.
மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகியோரை தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக பிரஸ்தாபித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.