யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல முருகன் ஆலயம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்ததவரை ஈவிரக்கமின்றி நபர் ஒருவர் தாக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கொக்குவில் 2பகுதியில் அமைந்துள்ள பிரபல முருகன் கோவிலில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. ஆலய கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த மேசன் மேசன் ஒருவர் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் அந்த தொலிலாளி மீது மண்வெட்டியால் தாக்குதல் நடாத்திய காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை குறித்த தொழிலாளி தாக்கப்படுவதை அங்குள்ளவர்கள் வேடிக்கை பார்த்து காணொளி எடுத்துகொண்டிருந்தார்களே தவிர யாரும் தாக்குதலை தடுத்து நிறுத்தவில்லை என்பது வேதனைக்குரியது