யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பேராசிரியர் மீதான சுயாதீன விசாரணை அறிக்கையை ஆராய்வதற்காக இன்று (7) கூடவிருந்த பல்கலைகழக பேரவையின் சிறப்பு அமர்வை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.
பல்கலைகழகத்தினால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற இரண்டு நீதிபதிகளை கொண்ட குழுவின் விசாரணைக்குழுவின் அறிக்கையை தாக்கல் செய்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக இன்று கூட்டப்படவிருந்த விசேட பேரவை கூட்டமே இடைநிறுத்தப்பட்டது.
தான் கலந்து கொள்ளாத விசாரணை அமர்வில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று பேராசிரியரால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர், முன்னாள் துணைவேந்தர்கள் மூவர், பதிவாளர், விசாரணைக்குழுவின் இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள், பேரவை உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.