யாழில் சிறப்புமிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் 9 ஆம் திருவிழாவான நேற்று (12-09-2024) கைலாய வாகன திருவிழா பக்தி பூர்வமாக இடம்பெற்றுள்ளது.
பாரம்பரியமாக கைலாய வாகன திருவிழா இடம்பெறும் துர்க்கை அம்மன் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் புடைசூழ ஆரம்பித்த கைலாய திருவிழாவானது சுவாமி வலம் வந்து சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கைலாய வாகன திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த மகோற்சவ காலத்தில் ஆலயத்தில் கலை, கலாச்சார நிகழ்வுகளும் சமய சொற்பொழிவுகளும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.