யாழ்.தெல்லிப்பழை இலங்கை வங்கி கிளையில் பணியாற்றும் ஒருவருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந் நிலையில், தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்காக குறித்த வங்கி கிளை மூடப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர்.
நேற்றய தினம் உடுவில் பகுதியில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் குறித்த வங்கி கிளையில் பணியாற்றிவரும் நிலையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கையாக வங்கி கிளையை மூடி தொற்று நீக்கல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வங்கியில் பணியாற்றும் இதர ஊழியர்களுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது