யாழ்.கந்தர்மடம் – மணல்தறை ஒழுங்கையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தகொள்ளையர்கள் கத்தி முனையில் வெீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றைகொள்ளையடித்து சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றய தினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டின்வெளிப்புறத்தில் இருந்த மின் குமிழை அகற்றிய கொள்ளையர்கள் பின்னர் சடுதியாக வீட்டுக்குள்நுழைந்து ஆசிரியையின் கழுத்தில் கத்தியை வைத்ததுடன்,
இதனால் பதற்றமடைந்த ஆசிரியை அபாய குரல் எழுப்ப முடியாமல் நின்ற நிலையில் சுமார் 3பவுண் சங்கிலி, காப்பு மற்றும் தோடு, மோதிரம் ஆகியவற்றை பறித்துள்ளதுடன், வேறு பணம்,
நகை உள்ளதா என கேட்டு அச்சுறுத்தியதுடன்,
வீட்டுக்குள் தேடுதல் நடத்தியுள்ளனர். மேலும் ஆசிரியை தனது தேவைக்காக தேநீர் தயாரித்துசுடுதண்நீர் போத்தலில் வைத்திருப்பதனை அவதானித்த கொள்ளையன் சிறிய அளவு தேநீரை ஒருகுவளையில் எடுத்து ஆசிரியருக்கு கொடுத்து குடிக்கவைத்ததுடன்,
தானும் தேநீரை குடித்துள்ளான். இவ்வாறு சுமார் அரைமணி நேரம் வீட்டினுள் நின்ற கொள்ளையன்அனைத்தையும் கொள்ளையடித்தவாறு தப்பிச் சென்றுள்ளான். இது தொடர்பில் யாழ்ப்பாணம்பொலிசாரிடம் செய்த முறைப்பாட்டினையடுத்து
யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று முழுவதும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.