யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மேலும் 50 ஆயிரம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலளர் கீதானந்தன் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு கடந்த மே மாத இறுதியில் 50 ஆயிரம் பொதுமக்களுக்கு தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவு ரீதியில் சினோபார்ம் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டது.
இந்நிலையில் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியை பெற்ற அனைவருக்கும் இரண்டாவது டோஸ் வழங்கும் பணி எதிர்வரும் 28ம் திகதி ஆரம்பமாகும் என பிரதமரின் இணைப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதற்காக சுகாதார அமைச்சினால் 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.