யாழ்ப்பாணத்திலுள்ள பகுதியொன்றில் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்து வீதியில் எறிந்த சந்தேக நபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அராலி பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் காலை அவரது வீட்டுக்கு முன்பாக ரூபா 10 லட்சம் பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்துள்ளார்.
இதனையடுத்து, வட்டுக்கோட்டையில் உள்ள இலங்கை வங்கிக்கு சென்று அங்கிருந்து 7 இலட்சம் ரூபா பணத்தினை எடுத்து வந்து வீதியில் எறிந்துள்ளார்