யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் தலைமையில் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்து கொள்ளையிடம் கும்பல் தொடர்பாக கிடைத்துள்ள தகவல்கள் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ் கொள்ளை சம்பவத்தில் ஒரு முச்சக்கர வண்டி சாரதி சிக்கியுள்ளார். இக்கொள்ளை பற்றி அவர் தெரிவிக்கையில் “யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளான காக்கைதீவு, பொம்மைவெளி, ஓட்டுமடம் பகுதிகளில், வீதியில் நிற்கும் பெண் ஒருவர் அவ்வழியே வரும் முச்சக்கர வண்டிகளை மறித்து நகர் பகுதிக்கு செல்ல வேண்டும் என வாடகைக்கு அமர்த்தி பொம்மைவெளி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அழைத்து சென்று பின் அந்த பெண் முதலில் அந்த வீட்டிற்குள் சென்று விட்டு , சில நிமிடத்தில் ஏதேனும் காரணம் கூறி முச்சக்கர வண்டி சாரதியையும் வீட்டிற்குள் அழைத்துருக்கின்றார். பின்பு சாரதி வீட்டிற்குள் சென்றதும் வீட்டினுள் இருக்கும் இளைஞர்கள், சாரதி அந்த பெண்ணுடன் தவறான நோக்குடன் நடந்து கொள்வதற்கு வீட்டினுள் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டி சாரதியை மிரட்டி அவரது தங்க சங்கிலி மற்றும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணம் என்பவற்றை கொள்ளையடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்காக பாதிக்கப்பட்ட சாரதி சென்றிருந்த போது அவரின் தொடர்பு இலக்கத்தை பெற்றுகொண்டு முறைப்பாடுகள் எதுவும் பதியாது பாதிக்கப்பட்ட நபரை போலீசார் திருப்பி அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.