யாழ்ப்பாணம், வேலணை – துறையூர் பகுதியில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவான விவசாய பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்களை வாகனத்தில் கொண்டு செல்ல முயன்ற நால்வர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (ஜனவரி 3) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து வந்த இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளின் மொத்த மதிப்பு சுமார் 50 மில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்குப் பிறகு, அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றன.
#யாழ்ப்பாணம் #பூச்சிக்கொல்லி #கைது #இந்தியாவிலிருந்து #பொலிஸ் #அதிரடிப்படை #விசாரணை