முன்னதாக யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றி வந்த காளிங்க ஜெயசிங்க கொழும்புக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டத்தை தொடர்ந்து அவருடைய இடத்துக்கு கொழும்பில் பணியாற்றிவந்த மாறப்பன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் பரவலாக நிகழும் பணியிடைமாற்றங்களின் ஓர் அங்கமாக இப்பணியிட மாற்றம் நிகழப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று(28) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.