யாழ் மாநகர சபையின் கட்டுப்பாட்டு விதிகளை மீறி வாரிசு படத்தின் டிக்கெட் 3000 ரூபாய்க்கு மேல் இணையம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றதாக கூறப்படுகினறது.
முகப்புத்தக பக்க ஒன்றில் இருந்து இது சம்பந்தமான விளம்பரங்கள் அதிகம் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.
இதில் யாழ் நகரில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் விஐபி சோக்கான டிக்கெட் ஆன்லைன் மூலமாக 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சாதாரண ரசிகர்களின் ஆசைகளையும் படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் முதலீடாக வைத்து இலாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் இது போன்ற செயலில் சிலர் ஈடுபடுவது தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.