தாயகத்தில் யாழ்ப்பாணம் சங்கரத்தை வயல் பகுதியில் புராதன கோவில் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றது.
மேற்படி இடத்தில் கிரந்த எழுத்தில் எழுதப்பட்ட1000 வருடம் பழமையைான கோவில் சிதலமடைந்து காணப்படுகிறது.
இந்தியாவில் இருந்து வந்த ஆய்வாளர்களே இந்த மொழியை வாசித்தறிந்து, இங்கே உள்ள இறைவன் பெயர் பிரகதீஸ்வர் என்று கூறப்பட்டதாம்.
எனவே இது தஞ்சாவூர் கோவில் பெயரை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது இங்கே இருந்த விக்கிரகங்கள் எல்லாம் களவாடப்பட்டுவிட்டன…..
யாரேனும் உணர்வாளர்கள் தனவந்தர்கள் சைவ அமைப்புக்கள் அறிந்தால் முன்வந்து உரிய அனுமதிகளோடு இதனை புனரமைப்பு செய்ய வேண்டப்படுகின்றீர்கள்.இதை உரிய நபர்கள் அறியும்படி பகிர்வதன் மூலம் தொன்மைமிகு ஆலயத்தினை பாதுகாத்திடலாம் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.