யாழ்ப்பாணத்தில் 1550 kg எடை கொண்ட ஊர்தியை 59 வயதுடைய செல்லையா திருச்செல்வம் என்பவர் தாடியால் இழுத்து உலக சாதனையை படைத்துள்ளார்.
குறித்த நபர் 400 மீற்றர் தூரத்தை 7 நிமிடம் 48 செக்கனில் இழுத்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்த உலக சாதனை நிகழ்வு, யாழ்.மட்டுவில் ஐங்கரன் சனசமூக நிலைய முன்றலில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவன இலங்கைக்கான கிளை தலைவர் யோ.யூட்நிமலன் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது.
இதன்போது அடையாளச் சான்றிதழும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.