யாழில் பல ஆண்டுகளாக தரவை நிலத்தில் சிறிது சிறிதாக வளர்க்கப்பட்ட மரங்கள் சிலரின் மோசமான செயலினால் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
யாழ் மண்கும்பான் பொது நிர்வாக ஓய்வு விடுதி அருகிலே மிகுந்த பணச்செலவில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிழல் தரும் மரங்கள் விசமிகளினால் தீயில் எரித்து அழிக்கப்பட்டுள்ளது.
மேய்ச்சல் தரவை புற்களை மாடுகளுக்கு உணவாக கூடாது என்பதற்காக எரித்து அழிக்கும் முயற்சியில் விசமிகள் செய்யபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை, அருகில் அரச பொது நிர்வாக ஓய்வு விடுதி இருந்தும் அங்குள்ள அரச ஊழியர்கள் கண்டும் காணாமலிருப்பது வேதனையளிக்கிறது என மக்கள் தெரிவிக்கின்றனர்.