யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு வாகன சில்லினுள் சிக்குண்ட தீயணைப்பு படை வீரர் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (18-04-2023) இரவு இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தீயணைப்பு வாகனம் ஹான்ட் பிரேக் போடப்படாமல் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாகனம் மெது மெதுவாக நகரவே அதனை கண்ட தீயணைப்பு படை வீரர் அதனை நிறுத்துவதற்காக கல் ஒன்றை சில்லுக்கு முன்பாக வைக்க முயன்றுள்ளார்.
இதன்போது சில்லுக்குள் அகப்பட்டு காயமடைந்தார்.
காயமடைந்த தீயணைப்பு படை வீரர் அங்கிருந்தவர்களால் மீட்டு யாழ் போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.