யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனா யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இன்று(30) காலை 9.30 மணியளவில் விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்நிலையில் நூலகத்திலுள்ள அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டதுடன், யாழ் மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலன் மற்றும் நூலக ஊழியர்களுடன் நூல் நிலைய நிலைமைகள் பற்றி கலந்துரையாடினார்.
இதன் போது யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன போன்றோர் கலந்துகொண்டனர்.