யாழில் பாழடைந்த வீட்டில் இருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
யாழ் – பாசையூர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாண விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு குறித்த வெடிமருந்துகள் இன்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அத்தோடு பொதி ஒன்றினுள் இருந்து 20 ஜெலட்டின் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஜெலட்டின் குச்சிகளில் உள்ள வெடி மருந்துகளை பிரித்தெடுத்து மீன் பிடிக்கான டைனமேட் தயாரிக்க மீனவர்கள் பயன்டுத்துவதும் குறிப்பிடத்தக்கது.