யாழ்ப்பாண பகுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டியார்மடம் பகுதியில் நேற்றிரவு (09-06-2023) இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த வயோதிபர் மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்றுகொண்டிருந்தவேளை அவ் வீதியால் வந்த வான் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

