யாழ்ப்பாணத்தில் வர்த்தக கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட கை கலப்பில் இளைஞன் ஒருவனால் பாதனியால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் ம் (20-07-2023) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் சேர்ந்த 66 வயதான செல்வரத்தினம் கரீந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஓடு விற்பனை நிலைய உரிமையாளரான இவர் தாக்கப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போது உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தாக்குதல் நடத்திய நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாண தபாலாகத்துக்கு முன்பாக வர்த்தக நிலையத்தை நடந்தி வரும் கொட்டடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வரத்தினம் கரீந்திரன் 35 வயதான நபர் ஒருவருக்கு ஓடு விற்பனை செய்துள்ளார்.
ஓட்டினை வாங்கிய நிலையில் அதற்குரிய அவர் பணத்தை கொடுக்காது இழுத்தடித்து வந்துள்ளார்.
இதையடுத்து பணத்தை திருப்பி கேட்கச் சென்ற போது நேற்று வியாழக்கிழமை (20) இரவு 7.30 மணியளவில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது ஓட்டு விற்பனை உரிமையாளரை ஓடு வாங்கிய 35 வயது நபர் பாதணியால் அடித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்படு செய்வதற்காக நேற்று இரவு 8.00 மணியளவில் கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து அவரை யாழ். போதனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.
இந்த மரணம் தொடர்பில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாண பொலிஸார் வர்த்தக நிலைய உரிமையாளரைத் தாக்கிய 35 வயதுடைய இளைஞரை கைது செய்யது சிறையில் அடைத்துள்ளனர்.