யாழ்ப்பாணம் – வரணி சுட்டிபுரம் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (04-07-2023) 12-00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அச்சுவேலி பகுதியில் தொழில் புரிந்து வரும் குறித்த குடும்பஸ்தர் நண்பர் ஒருவரை சாவகச்சேரியில் இறக்கிவிட்டு வடமராட்சி தேவரையாளி பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற வேளை மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் வடமராட்சி தேவரையாளி பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா ராஜ்குமார் வயது 30 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர்.
மேலும் அவருக்கு திருமணமாகி ஒரு வருடத்தில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்