யாழ்.மாவட்டத்தில் உள்ள சகல திரையரங்குகளும் உடன் அமுலுக்கு வரும்வகையில் மூடப்படுவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், புத்தாண்டு காலத்தில் அதிகளவான மக்கள் கூடும் அபாயம் உள்ளதாலும்,
திருமண நிகழ்வுகள், மண்டபங்களில் பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுந்த விமர்சனம் காரணமாக,
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.