யாழ்ப்பாணம் புங்குடுதீவு இறுப்பிட்டி பிரதேசத்தில் பசுக்கன்று திருட்டுத்தனமாக வெட்டப்பட்ட நிலையில்,அப்பகுதி இளைஞர்களால் மூவர் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றதாக தெரியவருகின்றது. நையபுடைக்கப்பட்ட பின்னர் சந்தேகநபர்கள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பொலிஸாரிடம் ஒப்படைக்கபப்ட்டவர்களில் இருவர் கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
மேலும் சந்தேக நபர்கள் கடந்த இரண்டுமாதங்களாக இங்கு தங்கியிருந்து மாட்டுத்திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் இளைஞர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.