யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
கோப்பாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர் பயணித்துக்கொண்டிருந்த வேளை இனம் தெரியாத நபர்கள் அவரை வழிமறித்து தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.