யாழில் இரவு வேளையில் வீடு புகுந்த வாள்வெட்டு குழு ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது வீட்டிலிருந்து பொருட்கள் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவு (21) வியாழக்கிழமை யாழ்.யாழ்.நீர்வேலி தெற்கு J/268 கிராமசேவகர் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் சம்பவத்தில் 4 பேர் கொண்ட வாள்வெட்டு குழுவினர் வீட்டுக்குள் வாள்கள், கம்பிகளுடன் நுழைந்து பொருட்களை அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்ததாக பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று காலை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (Jeevan Thiyagaraja) வடக்கில் வன்செயல்களை கட்டுப்படுத்துவது குறித்து முப்படை தளபதிகள், பொலிஸார், மற்றும் அதிரடிப்படையினருடன் பேச்சு நடத்தியிருந்தார். அந்த பேச்சு நடந்த அன்று மாலையே வாள்வெட்டு குழுவினர் இவ்வாறு அட்டகாசம் புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.