யாழில் இடம்பெற்றுவரும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
யாழ்.(Jaffna) தென்மராட்சியில் சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்படும் இடங்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar) நேற்றையதினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், சுண்ணக்கல் அகழ்வு தொடர்பில் விசாரணைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.
தென்மராட்சிப் பிரதேசத்தின் சரசாலை வடக்கு மற்றும் மந்துவில் பகுதிகளில் அதிகளவான சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த இடங்களுக்கு நேரில் சென்று களநிலவரங்களை அமைச்சர் இதன்போது ஆராய்ந்தார்.
இதன்போது. அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்(Ilankumaran) மற்றும் அதிகாரிகள் சிலரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.