இலங்கையில் யாரேனும் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்திருந்தால், நாட்டின் சட்டத்தின்படி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
பன்டோரா பேப்பர்ஸில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயர் இடம்பெற்றமை குறித்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கேள்வியெழுப்பட்டது.
இன்று காலையே இந்த விடயம் தொடர்பாக அறிந்துகொண்டதாக குறிப்பிட்ட அவர் உடனடியாக இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது ரோஹித அபேகுணவர்தன கூறினார்.
கறுப்பு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் பட்டியலில் நிருபமா ராஜபக்ஷவின் பெயரும் அம்பலம்!