கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல சுண்டியாற்று பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கிண்ணியா இடிமனையைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நேற்றைய தினம் இரவு தந்தையுடைய பண்ணைக்கு சென்ற வேலையில் அவரை மறைந்திருந்த யானை ஒன்று தாக்கியுள்ளது.
இப்பகுதியில் இரண்டு வாரத்துக்குள் நான்கு பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.