யானை தாக்கியதில் பயிற்சியில் இருந்த இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது இன்றையதினம் அரலகங்வில வலமண்டிய காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 19 வயதுடைய இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது.
இராணுவ பயிற்சி குழுவொன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த காட்டு யானை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த இராணுவ சிப்பாய் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இராணுவ சிப்பாய் மாதுரு ஓயா இராணுவ சிறப்புப் படைப் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வந்தவராவார்.
அவர் அம்பகஸ்துவ தங்கமுவ பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.