காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் கோட்டா கோ கம எழுச்சிப் போராட்டம் இன்று 33ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
நேற்று முன்தினம் போராட்ட களத்தில் குண்டர்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நேற்றிரவு ஐந்து நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் போராட்டத்தின் பிரதான மேடையில் கூடிய சர்வ மத தலைவர்களும் வன்முறையை நிறுத்துமாறு இதன்போது கேட்டுக் கொண்டனர்.