தேவையான பொருட்கள்
வெண்பூசணி – 100 கிராம்,
தயிர் – 100 கிராம்
தக்காளி – 1
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 3
தனியா – அரை டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 2 (சிறிது எண்ணெயில் வறுத்து, தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும்).
செய்முறை
தயிரைக் கடைந்து கொள்ளவும்.
தக்காளி, பூசணியைத் துண்டுகளாக நறுக்கி வேகவிடவும்.
காய் வெந்து வரும்போது உப்பு, வறுத்து அரைத்த விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.
பிறகு, வேக வைத்த பருப்பு, கடைந்த தயிர் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கி, லேசான தீயில் மீண்டும் கொதிக்கவிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, சாம்பாரில் சேர்த்து இறக்கவும்.