இந்தியாவில் சார்ஜ் போடப்பட்ட மொபைல் பேட்டரி வெடித்து சிதறியதில் முகம் கிழிந்து 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேசத்தில் உள்ள மிர்சாபூர் மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மோனு எனும் 12 வயது சிறுவனுக்கு இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மோனு, Jadoo எனப்படும் சார்ஜர் மூலம் தனது செல்போன் பேட்டரிக்கு சார்ஜ் போட்டுள்ளார். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து அந்த சார்ஜரிலிருந்து பேட்டரியை எடுத்துள்ளார்.
சார்ஜ் ஆகிவிட்டதா என பார்ப்பதற்காக தனது நாக்கை பேட்டரியில் வைத்து பார்த்துள்ளார்.
அப்போது திடீரென அந்த பேட்டரி பெரிய சத்தத்துடன் மோனுவின் முகத்திலேயே வெடித்துள்ளது.
சத்தம்கேட்டு ஓடிவந்து பார்த்த குடும்பத்தினர், மோனு இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பதறியடித்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், அவர் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின்னர் பொலிஸிடம் தகவல் தெரிவிக்காமல் சிறுவனின் உடலை தகனம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மொபைல் பேட்டரி வெடித்து 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.