ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியதிகாரத்தின் கீழிருக்கும் ஜா-எல நகர சபையின், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் (பட்ஜெட்) மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது.
பட்ஜெட்டுக்கு ஆதரவாக ஐந்து வாக்குகள் அளிக்கப்பட்டுள்ள அதேவேளை எதிராக 10 வாக்குகள் கிடைத்துள்ளன.
இதனால், மேலதிக வாக்குகளால் பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை வாக்கெடுப்பில் , வரவு- செலவுத்திட்டத்துக்கு எதிராக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த ஐவர் வாக்களித்துள்ளமை விசேட அம்சமாகும்.