அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நம்பிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்பது தனக்குத் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (09) சென்று வழிபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.