எதிர்வரும் மே 9ம் திகதி உணவகங்களின் உட்பகுதிகளைத் திறக்கும் நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில் தற்போது மேலதிக கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது.
மே 9ம் திகதி உணவகங்கள் திறக்கும் போது, உட்கொள்ளளவில் 50மூ வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த அறிவித்தல்கள், உணவகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது, மேலதிக விபரங்கள் கலந்தாலோசிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களிற்குள் இருக்கும், அல்லது நிறுவனங்களிற்கான உணவகங்களிற்கும் இதே கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.