2000 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு மேலதிக வரி விதிக்கும் சட்டமூலம் ஒன்றினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அனுமதி கோரி நிதி அமைச்சரினால் அமைச்சரவை பாத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் இன்று வழங்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் இன்று தெரிவித்தார்.
எனவே,அந்த சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக முன்வைக்கப்பட்ட யோசனைகள் அனைத்திற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.