விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்த நிலையில், திடீரென அவர் கண்விழித்த அற்புதம் பிரித்தானியாவில் நடந்துள்ளது.பிரித்தானியாவின் Staffordshireஐச் சேர்ந்த Lewis Roberts (18), இம்மாதம் 13ஆம் திகதி, வேன் மோதி விபத்துக்குள்ளானார்.
தலையில் அடிபட்ட Lewisஐ ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்கள்.நான்கு நாட்களுக்குப் பின் குடும்பத்தார் Lewisக்கு விடைகொடுக்கலாம் என்றும், அவரது செயற்கை சுவாசத்தை நிறுத்த முடிவு செய்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்ணீர் விட்டுக் கதறிய குடும்பம், கடைசியாக, Lewisஇன் உடல் உறுப்புகளை ஏழு பேருக்கு தானம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளது.அறுவை சிகிச்சை செய்து உடல் உறுப்புகளை அகற்றுவதற்காக, கொஞ்ச நேரம் கூட அவரது செயற்கை சுவாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் Lewisஇன் அக்காவான Jade Roberts (28), தம்பியுடைய அறையில் அமர்ந்து, அவரிடம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்.Lewis, நீ தயாராக இருக்கிறாயா, நான் ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்வேன், நீ சுவாசிக்கவேண்டும் சரியா, என்று கேட்டுவிட்டு, ஒன்று, இரண்டு, மூன்று சுவாசி Lewis என்று சொல்ல, சினிமாவில் வருவதுபோல் சட்டென சுவாசித்திருக்கிறார் Lewis.
சுவாசிக்க ஆரம்பித்துள்ள Lewis, பின்னர், அனைவரும் ஆச்சரியப்படத்தக்க விதமாக கண்களை சிமிட்டத் தொடங்கினாராம்.உலகத்திலேயே மூளைச்சாவு அடைந்த ஒருவர் மீண்டும் உயிர் பெறுவது இதுதான் இரண்டாவது முறையாம்…
தற்போது Lewis கை கால்களை அசைக்கவும், தலையை அசைக்கவும் கண்ணிமைக்கவும், வாயை அசைக்கவும் தொடங்கியுள்ளார்.மருத்துவர்களால் இறந்துபோனதாக கருதப்பட்ட Lewis மீண்டும் உயிர்பெற்றுள்ளதால், சொல்லொணா ஆனந்ததில் ஆழ்ந்துள்ளது அவரது குடும்பம்.