ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முழுமையான அதிகாரங்களுடன் கூடிய தனது ஊழியர்கள் குழுவின் பிரதானியாக அனுர திஸாநாயக்கவை நியமித்துள்ளார். இதனடிப்படையில் அனுர கோட்டாவின் ஊழியர்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் சம்பந்தமான ஆலோசனையை , சமல் ராஜபக்ச மற்றும் ஷசீந்திர ராஜபக்ச ஆகியோர் வழங்கியதாக கூறப்படுகிறது அரச தலைவராக பதவியேற்ற பின்னர், கோட்டாபய ராஜபக்ச தனது செயலாளராக அனுர திஸாநாயக்கவையே நியமிக்க திட்டமிட்டிருந்தார்.
எனினும் ராஜபக்ச குடும்பத்தின் அழுத்தங்கள் காரணமாக பி.பீ. ஜெயசுந்தரவை செயலாளராக நியமிக்க நேரிட்டது. அதன்பின்னர் ஜெயசுந்தர பதவி விலகிய பின்னர் மீண்டும் அனுர திஸாநாயக்கவை நியமிக்க திட்டமிட்டிருந்த போது, காமினி செனரத்தை ராஜபக்ச குடும்பத்தினர், நியமிக்குமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்துஅன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் செயலாளராக அனுர திஸாநாயக்க நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தற்போது முழுமையான அதிகாரங்களுடன் அனுர திஸாநாயக்கவை தனது ஊழியர்கள் குழுவின் பிரதானியாக ஜனாதிபதி கோட்டாபய நியமித்துள்ளார்