யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு தனது முதல் மாத மாநகர முதல்வர் ஊதியத்தை யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வழங்கியுள்ளார்.
அதன்படி தூபியமைப்பதற்காக நிதி திரட்ட யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட வங்கிக் கணக்கில் அவர் தனது , மாத ஊதியமான 35,462 ரூபாயை வைப்பிலிட்டுள்ளார்.
இந்நிலையில் மாநகர சபை உறுப்பினராக தொரிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து தனது ஊதியத்தை பொது சேவைக்காக அவர் வழங்கி வருவதாக குறிப்பிடப்படுகிறது