யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கஞ்சி வழங்கி அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடசாலை சிறுவர்கள் என ஏராளமானோர் முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்திச் சென்றமையைக் காணமுடிந்தது.
தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை இளஞ்சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு படங்கள் தாங்கிய ஊர்திப் பவனி தமிழர் பகுதியெங்கும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.