முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு, சுமார் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தினால் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு குறித்த இயந்திரங்கள் நேற்று (வியாழக்கிழமை) கையளிக்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக, 21 இலட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள் ஆகியன முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உமாசங்கரிடம் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ கையளித்தார்.
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் ஜேசு ரெஜினோல்ட் , மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்கள், முல்லைத்தீவு மாவட்ட உதவி பிரதேச செயலாளர் திருமதி.எல்.கேகிதா, வைத்திய அதிகாரிகளான வைத்தியர் திரு.சோபன், வைத்தியர் திரு.விதுரன்† ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.