முல்லைத்தீவு – குருந்தூர் மலையின் அகழ்வு பணியின் போது இனம் காணப்பட்ட கல் அனுராதபுர காலத்து பாரிய தூபியின் முடிப்பகுதி என சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் முகமாக தொல்பொருள் திணைக்கள இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தனது முகநூலில் இது குறித்த செய்திகளை பதிவேற்றியுள்ளார்.
அனுராதபுர காலத்து 01ஆம், 02ஆம் நூற்றாண்டு காலத்திற்குரிய பாரிய தூபியின் முடி பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், இதன் நீளம் 6 மீற்றர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருந்தூர் மலைக்கு படையினரும், பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றார்கள். தமிழர்களும் எவரும் அகழ்வு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.