கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் தலைவர் ரோஹித் சர்மா 1,000 ஐபிஎல் ஓட்டங்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல்-இன் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. கடந்த ஆட்டத்தில் காயம் காரணமாக ஓய்வெடுத்துக் கொண்ட மும்பை தலைவர் ரோஹித் இந்த ஆட்டத்தில் களமிறங்கினார்.
இந்த ஆட்டத்தில் 33 ஓட்டங்கள் எடுத்த ரோஹித் சர்மா, கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக மட்டும் 1,000 ஐபிஎல் ஓட்டங்கள் என்ற சாதனையை படைத்தார். வருண் சக்ரவர்த்தி வீசிய மூன்றாவது ஓவரில் இந்த மைல்கல்லை எட்டினார் ரோஹித்.
குறிப்பிட்ட ஒரு ஐபிஎல் அணிக்கு எதிராக எந்தவொரு வீரரும் 1,000 ஓட்டங்கள் எடுத்ததில்லை. இதன்மூலம், தனித்துவமான சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார் ரோஹித் சர்மா.