இலங்கை முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க 100 மில்லியன் ரூபாய் 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்பள்ளி சிறுவர்களின் காலை உணவுக்கான பணமும் 100 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டிற்கான பாதீடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களினால் தற்போது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது.
பாதீடு முன்வைப்பிற்காக சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியுள்ளது.