முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு விசாரணை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதனடிப்படையில் குறித்த முறைப்பாடு மீதான விசாரணையை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கலாமா வேண்டாமா என்பது தொடர்பான உத்தரவு வரும் 14 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அறிவிக்கப்படும்.
அன்றைய தினம் மனுதாரர் மைத்திரிபால சிறிசேனவும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுதாரரின் சட்டத்தரணிகளுக்கு அறிவித்தது.