முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றியபோது அரசாங்கத்துக்கு 883 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த வழக்கை தொடர முடியாது என சஜின் வாஸ் குணவர்தன சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனையை ஏற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மேலும் இந்த வழக்கிணை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்தது தெரியவந்துள்ளது.