கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நேற்று (09) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நேற்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு அழைத்து வரப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
லொஹான் ரத்வத்த கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் அவர் ஓட்டிச் சென்ற ஜீப் மற்றுமொரு காருடன் மோதி கடந்த 6ஆம் திகதி விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.