தெருச்சண்டையின்போது, முத்தமிடுவதுபோல் பிரித்தானியரின் நாக்கைக் கடித்துத் துப்பினார் ஒரு இளம்பெண்.ஸ்காட்லாந்திலுள்ள எடின்பர்கில், முன் பின் தெரியாத ஒரு ஆணுக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சண்டையின்போது James McKenzie என்ற அந்த ஆண், Bethaney Ryan (27) என்ற அந்த பெண்ணை நெருங்கி முகத்தில் குத்துவது போல் கை முஷ்டியை ஓங்க, சட்டென எதிர்பாராமல் அவரை இழுத்து முத்தமிட்டுள்ளார் Bethaney.
James சற்றும் அதை எதிர்பாராததால், அவர் திகைத்து நிற்கும் நேரத்தில், அவரது நாக்கைக் கடித்துத் துண்டாகிவிட்டார் Bethaney.
அனிச்சையாக கடிபட்ட நாக்கின் துண்டை துப்பிவிட்டு, வாயில் கொட்டும் இரத்தத்துடன் James திகைத்து நிற்கும் நேரத்தில், மற்றொரு பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
ஒரு பெரிய seagull எனும் பறவை, அந்த நாக்கை அவர் கண் முன்னாலேயே தூக்கிச் சென்று விழுங்கிவிட்டிருக்கிறது.
ஆக, James இரத்தம் கொட்டும் வாயுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவரது நாக்கை அந்த பறவை விழுங்கிவிட்டதால், மருத்துவர்களால் அவருக்கு எந்த உதவியும் செய்ய முடியாமல் போய்விட்டது.
இனி, வாழ்நாள் முழுவதும் நாக்கில் பாதி இல்லாமலேதான் James வாழ்க்கை நடத்தவேண்டும்.
Bethaney தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அந்த வித்தியாசமான வழக்கு தொடர்கிறது.