இலங்கை சாரணர் இயக்கத்தின் 105வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட கொடி தினத்தின் முதலாவது கொடி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அணிவிக்கப்பட்டது.
இலங்கை சாரணர் இயக்கத்தின் உதவி தலைமை ஆணையாளர் நிர்மலி வில்லியத்தால் அவருக்கு அணிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது சாரணர் இயக்கத்தின் வரலாறு குறித்து எழுதப்பட்ட நூல் ஒன்றும் இலங்கை சாரணர் இயக்கத்தின் தொடர்பாடல் ஆணையாளர் ருக்ஷானி அஸீஸால் பிரதமருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை சாரணர் இயக்கத்தில் நாடளாவிய ரீதியில் சுமார் 70,000 சாரணர்கள் இணைந்திருக்கின்றனர். அதேசமயம் அவர்களில், விசேட தேவையுடைய சாரணர் குழுவும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.